தமிழால் தமிழ் வாழும்
======================================
ஆறம் அழிவிலாத்தோங்க அகமடக்க
ஆக்கம் அடங்கி வர அருளே பொருள்
இறப்பு இயற்கையில் விளைவதால் இக்கட்டுநிலை ஏற்புடையது
ஈரடி குறளரியா மக்கள் பேரடி பெற்ற மாக்களே
உரமது மண்மேவி பெற்ற கனி போல, மனமதுள் கசிகிற கசப்பின் உச்சஇருப்பளவு
ஊதும் குழலிசை ஊணமென்றால் , ஏந்தும் கைகளால் என்ன பயன்
என்புமேவிய தசையின் வேகம் என்றும் வேகும்
ஏமாற்றம் என்றும் மாற்றமே
ஐம்புலன் வீழ்ச்சியின் உச்சநிலை ஐயத்திற்கிடமானது
ஒதுங்கிப்பதுங்கும் ஓநாய்கோர்ரறிவும், ஒன்பதுகோள் அறியும் மானிடனுக்கோ ஆறறிவும் இருந்தும் என்ன பயன்
ஓட்டமில்லா வாழ்க்கைக்கு ஊட்டமில்லா தேகம் ஒப்பாகுமா
கொடுத்து கெடுத்தது வானம் , கெடுத்தும் கொடுத்தது பூமி , கேடு விளைவிப்பது மனம், வினைப்பது விளைப்பது தினம்
உண்மைக்கும் உன் மெய்க்கும் பொருள் தெளிந்து வாழ்தல், பொய்க்கும் பொய்மைக்கும் இருக்கும் தூரமே
No comments:
Post a Comment